22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

வச்சான் பாரு ஆப்பு!!!

உலகம் முழுதும் ஓடிடி தளத்தில் தனக்கென தனி அடையாளத்தை கொண்டுள்ளது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்
இந்த நிறுவனத்தின் செயலியை பயன்படுத்துவோர் தங்கள் பாஸ்வேர்டுகளை தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர்
இதனால் அந்த நிறுவனத்துக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. இந்தசூழலில் நிதி இழப்பை ஈடுகட்டும் வகையில் புதிய உத்திகளை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிட்ட ஒரு சாதனத்தில் மட்டுமே இயங்கும் வகையில் நெட்பிளிக்ஸ் ஐடி மாற்றி அமைக்கப்பட உள்ளது. அவ்வாறு மாற்றி அமைக்கப்படும் போது பாஸ்வர்டுகளை பலர் பயன்படுத்த முடியாது.
குறிப்பிட்ட ஒரு சாதனைத்தை முதன்மை சாதனமாக கொண்டு அதற்கு மாத சந்தா வசூலிக்கப்பட உள்ளது. அதே பாஸ்வேர்டுகளை வேறு சாதனத்தில் பயன்படுத்தினால் அது ஒருவரின் கணக்கில் துணை கணக்காக சேர்க்கப்படும், அதற்கும் விரைவில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. உதராணமாக, குறிப்பிட்ட ஒரு சாதனத்துக்கு சந்தா 100 ரூபாய் செலுத்தும் இடத்தில் பாஸ்வேர்டை வேறொருவர் பயன்படுத்தினால் அதற்கும் சேர்த்து முதன்மை சந்தா செலுத்த வேண்டும். முதல்கட்டமாக கால்பங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்க அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *