காசநோய்க்கான மருந்து விலையை குறைத்த நிறுவனம்..

உலகளவில் காசநோய்க்கான மருந்தாக பிரிடோமனிட் என்ற மருந்து விற்கப்படுகிறது. இந்த மருந்தை பல்வேறு நிறுவனங்களும் பல்வேறு நாடுகளில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இந்த சூழலில் மும்பையைச் சேர்ந்த லுபின் நிறுவனமும் இந்த மருந்தை உற்பத்தி செய்ய உரிமம் பெற்றுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட மருந்தின் விலை 25 விழுக்காடு வரை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காச நோய்க்கு முடிவுகட்டும் வகையில் பல்வேறு முயற்சிகளை ஜிடிஎப் அமைப்பு அறிவித்துள்ளது. ஒருவர் காசநோய்க்கு மருந்து எடுக்க 224 டாலர்கள் செலவிடும் நிலையில், இந்த விலைக் குறைப்பால் 169 டாலர்கள் மட்டுமே செலவாகும் என்று கூறப்படுகிறது. இந்த விலைக்குறைப்பால் தினசரி 1 அமெரிக்க டாலர் அளவுக்கு மட்டுமே சிகிச்சைக்கு செலவாகும். டிபி அலையன்ஸ் என்ற தொண்டு நிறுவனம் குறிப்பிட்ட மருந்துகளை வருவாய் குறைவாக உள்ளோர் பயனடையும் வகையில் பொதுவெளியில் வைத்தது. கடந்த 2024-ல் மட்டும் 1லட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த மருந்தை உலகளவில் ஆர்டர் செய்து உபயோகிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த அளவு என்பது உலகளவில் உள்ள டிபி நோயாளிகளின் எண்ணிக்கையில் 60 விழுக்காடாகும். நன்கொடையாளர்கள், அரசாங்கம், கட்டுப்பாட்டு அமைப்புகள், உள்ளிட்டோரின் கூட்டு முயற்சியால்தான் இது சாத்தியமாகியிருப்பதாக உலக மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான ஜிடிஎப் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.