சர்ச்சையில் சிக்கியிருக்கும் மதாபி..யார் இந்த மதாபி..
அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் செபியின் தலைவர் மதாபி மீது சரமாரி புகார்களை முன்வைத்தது. அதில் அதானியின் நிறுவனத்தில் செபியின் தலைவராக உள்ள மதாபிக்கும் பெரிய அளவில் பங்கு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொரிசியஸ் மற்றும் பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் பற்றி அதானி குழுமம் தகவல்களை வெளியிடவில்லை என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் புகாரில் சிக்கியுள்ள மதாபி யார் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.. 1966-ல் பிறந்தவர் மதாபி புரிபுச். இவர் தற்போதைய செபி அமைப்பின் தலைவராக இருக்கிறார். செபி அமைப்பின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் கொண்டுள்ளார் மதாபி. மும்பையில் உள்ள ஃபோர்ட் கான்வென்ட்டில் ஆரம்பப் பள்ளிப்படிப்பையும், ஜீசஸ் அன்ட் மேரி கான்வென்ட்டில் மேல்நிலைப்பள்ளிப்படிப்பையும் மேற்கொண்டார். டெல்லியில் உள்ள ஸ்டீபன்ஸ் காலேஜில் கணித இளங்களை படிப்பை படித்த இவர் அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்மில் எம்பிஏ படித்தார். கடந்த 1989 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் சேர்ந்த மதாபி, ஐசிஐசிஐ வங்கியின் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்து கடந்த 2009 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றினார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மதாபி செபியின் முழுநேர இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் செபியின் 7 பேர் அடங்கிய தொழில்நுட்பக்குழுவில் இடம்பிடித்தார். அதானி குழுமத்தின் பங்குகளை வைத்திருக்கும் மதாபி, முதலில் தம்மை தாமே விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.