மதாபியின் கணவர் விளக்கம்
இந்திய பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபியின் தலைவராக இருப்பவர் மதாபி புரி புச். இவர் மீதும், இவரின் கணவர் தாவல்புச் மீதும் சரமார் புகார்கள் குவிந்து வந்தன. குறிப்பாக தாவலிடம் அதானி குழும பங்குகள் இருப்பதாககவும் கூறப்பட்டது. மேலும்மும்பையில் உள்ள சொகுசு அடுக்குமாடி கட்டடடத்தை இருவரும் வாடகைக்கு விடப்பட்டது சர்ச்சையை கிளப்பதியது. இது குறித்து மதாபி மற்றும் தாவல் ஆகிய இருதரப்பினரும் இணைந்து வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், வாடகைக்கு விடப்பட்டது உண்மைதான் என்றும் காரல் இன்ஃபோ சர்வீசஸ் என்ற நிறுவனம், wockhardt என்ற நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், wockhardt நிறுவனத்துடன் மதாபிக்கு எந்த பரிவர்த்தனைகள் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இந்த குற்றசா்சாட்டை சிலர் முன்வைத்ததாகவும் மதாபி தரப்பு விளக்கத்தை முன்வைத்துள்ளனர். சந்தை விதிகளுக்கு உட்பட்டு தான் வாடகை விடப்படுவதாகவும், செபிக்குள் மதாபி புரிபுச் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பின் மூலம் மதாபிக்கு சுமார் 2 கோடி ரூபாய் வரை வருமான வரி வந்தது எப்படி என்று காங்கிரஸ் கட்சியின் பவன் கேரா ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு மதாபியும் அவரின் கணவரும் விளக்கம் அளித்துள்ளனர். அதே நேரம் wockhardt நிறுவனமும் தங்கள் தரப்பில் எந்த விதிமீறலிலும் இடம்பெறவே இல்லை என்றும் மறுத்துள்ளது.