மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா???
ரிலையன்ஸ் குழுமத் தலைவரான முகேஷ் அம்பானி லிவர் பூல் அணியை வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகின் முன்னணி கால்பந்து கிளப் அணிகளில் ஒன்றான லிவர்பூல் எப்சி அணியை பெரும் தொகைக்கு ஏலம் விட அண்மையில் முடிவெடுக்கப்பட்டது. இத்தனை பெரிய தொகையை அளித்து கால்பந்து அணியை வாங்க முகேஷ் அம்பானி முயற்சிப்பது முதல்முறையல்ல. 2010ம் ஆண்டு fenway ஸ்போர்ட்ஸ் கிளப்பை அம்பானி வாங்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அந்த ஆண்டு அந்த வாய்ப்பு கோல்மென் சாக்ஸ் என்ற நிறுவனத்துக்கு கிடைத்தது. இந்தியாவில் தற்போது மும்பை இந்தியன்ஸ் என்ற ஐபிஎல் அணியை முகேஷ் அம்பானி வைத்துள்ளார் அனைத்திந்திய கால்பந்தாட்ட கழகத்துடன் இணைந்து ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளையும் முகேஷ் அம்பானி நடத்தி வருகிறார். இத்தகைய சொத்து வைத்துள்ள முகேஷ் அம்பானி உலகின் 4வது பெரிய கிளப் அணியை வாங்க இருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. 4.45 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வியாபாரம் படியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை குறிப்பிட்ட லிவர்பூல் கால்பந்து அணி லீக் போட்டிகளை 19 முறையும், ஐரோப்பிய போட்டிகளில் நிறைய முறையும் ஜெயித்துள்ளன. லிவர்பூல் அணியை வாங்க அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளிலும் இருந்து பெரும்பணக்காரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் பிரிட்டனின் முன்னணி கால்பந்து அணிகளான நியூகாஸ்ட்டில் அணியை சவுதி பொது நிதியும்,செல்சீ அணியை போயல்லியும் வாங்கியுள்ளன. எனினும் ரிலையன்ஸ் தரப்பில் இதுவரை எந்த அதிகார அறிவிப்பும் வெளியாகவில்லை.