அடுத்த 5 வருஷம் பெரிய பிசினஸ் செய்வோம்”

மஹிந்திரா அன்ட் மஹிந்திராவின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் அனிஷ் ஷா. இவர் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வணிகத்தை செய்ய இருப்பதாக கூறியுள்ளார். ஆட்டோமொபைல், விவசாயம் மற்றும் சேவைத்துறைகளில்தான் அதிக கவனம் செலுத்துவதாக கூறியுள்ள அந்நிறுவனம், சேவைத்துறையில், நிதி, தொழில்நுட்பம், விருந்தோம்பல், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் உள்ளன. விருந்தோம்பல், ரியல் எஸ்டேட், விமானத்துறையிலும் கால்பதிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மஹிந்திரா ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, மற்றும் ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்னும் அதிகளவில் வணிகம் செய்ய வாய்ப்புள்ள இடங்களாக கூறப்படுகிறது. மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஆண்டு லாபம் 11, 269 கோடி ரூபாயாக இருக்கிறது என்றும், வருவாய் 1.4லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாகவும் அவர் கூறினார். 2025 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் வருவாய் 12.5விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும், நிகர லாபம் 13.14%உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். விவசாயம் மற்றும் ஆட்டோமொபைல் பிரிவுகளை தனித்தனியாகபிரித்து பங்குச்சந்தைகளில் பட்டியல் இடும் யோசனையே இதுவரை வரவில்லைஎன்று கூறியுள்ள அனிஷ், விருந்தோம்பல் துறையில், குறிப்பாக ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும், 100 ரிசார்ட்களில் தற்போது வரை 85 விழுக்காடு மக்கள் வந்து செல்வதாகவும் கூறியுள்ளார்.