மீண்டும் சந்தையில் சரிவு….

வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73 புள்ளிகள் குறைந்து 81,151 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 112 புள்ளிகள் குறைந்து 24, 741 புள்ளிகளில் வணிகத்தை முடித்தன. முதல்பாதியில் பங்குவணிகம் பெரிய அளவில் சரிந்து முடிந்தது. இரண்டாவது பாதியிலும் வணிகம் மீளவே இல்லை. HDFC Bank, Bajaj Auto, Asian Paints, M&M, Eicher Motorsஆகிய நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து முடிந்தன. Tata Consumer Products, Kotak Mahindra Bank, BPCL, IndusInd Bank, Bajaj Finservஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. ஆட்டோமொபைல் தவிர்த்து மற்ற அனைத்துத் துறை பங்குகளும் சிவப்பில் முடிந்தன. FMCG, உலோகம், ஆற்றல், ரியல்எஸ்டேட், தகவல் தொழில்நுட்பத்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஊடகத்துறை பங்குகள் 1 முதல் 3 விழுக்காடு சரிந்தன. Amber Enterprises, BF Investment, Dixon Technologies, Garware Technical, GFL, HCL Technologies, Indigo Paints, JSW Holdings, Maharashtra Scooters, MCX India, NALCO, Pilani Investment, Summit Securities, Suven Pharma, Tech Mahindra உள்ளிட்ட 250க்கும் அதிகமான நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. அக்டோபர் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கம் விலை
சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து வரலாற்றில் புதிய உச்சமாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 7ஆயிரத்து300 ரூபாயாகவும், ஒரு சவரன் 58 ஆயிரத்து400ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 109 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே நகை தொடர்பாக குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.