சந்தை – இன்றைய நிலவரம்…
இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத்தின் முதல் நாளில், 60 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. இதன் படி வர்த்தக நேர முடிவில், சந்தைகள் 300 பள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. இதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரித்து 60 ஆயிரத்து 115 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 103 புள்ளிகள் அதிகரித்து 17 ஆயிரத்து 936 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் அதானி போர்ட்ஸ், டைட்டன் கம்பெனி. டேவிஸ் லேப் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகரித்தும், கோல் இந்தியா, ஸ்ரீ சிமென்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி போன்ற நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. தங்கத்தின் விலை பொருத்தவரை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 4,745 ரூபாய் என்ற விலையிலும் ஒரு சவரன் 37,960 என்ற நிலையிலும் உள்ளது. அதேபோல் 24 கேரட் முதலீட்டுக்கான தங்கத்தின் விலை, ஒரு கிராம் 5 ஆயிரத்து 147 ரூபாய் என்ற நிலையிலும் எட்டு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 41,176 ரூபாய் என்ற நிலையிலும் உள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 61 ரூபாய் 40 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 61,400 என்ற நிலையிலும் உள்ளன.