ரூ.4லட்சம் கோடி இழப்பு..

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் கடுமையாக சரிந்த இந்திய பங்குச்சந்தைகள், இந்த வாரத்தின் முதல் நாளிலும் ஆட்டம் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 856 புள்ளிகள் சரிந்து 74 ஆயிரத்து 454 புள்ளிகளாகவும்,தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243 புள்ளிகள் குறைந்து, 22 ஆயிரத்து 553 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவுற்றது. M&M, Eicher Motors, Dr Reddy’s Labs, Hero MotoCorp, Kotak Mahindra BanK உள்ளிட்ட பங்குகள் லாபத்தை பதிவு செய்தன.Wipro, HCL Technologies, Infosys, TCS, Tata Steel உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரியளவில் சரிந்தன. தகவல் தொழில்நுட்பத்துறை, உலோகம், டெலிகாம் நிறுவன பங்குகள் சுமார் 2விழுக்காடு வரை சரிந்தன.ரத்னமணி மெட்டல், வெல்ஸ்பன் லிவிங் செலோ வேர்ல்டு உள்ளிட்ட 280 நிறுவன பங்குகள் கடந்த ஓராண்டில் இல்லாத சரிவை கண்டன. திங்கட்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 64 ஆயிரத்து 440ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 10ரூபாய் விலை உயர்ந்து 8 ஆயிரத்து 055 ரூபாயாக விற்கப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 108 ரூபாயாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ1லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி, மற்றும் கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.