22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

முடிவுக்கு வந்த சரிவு..

5 நாட்கள் சரிவுக்கு பிறகு மும்பை பங்குச்சந்தையில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது.திங்கட்கிழமை 856 புள்ளிகள் சரிந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், செவ்வாய்க்கிழமை 148 புள்ளிகள் உயர்ந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 74ஆயிரத்து 602 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 6 புள்ளிகள் குறைந்து 22ஆயிரத்து 547 புள்ளிகளாகவும் வர்த்தகம் முடிந்தது. M&M, Bharti Airtel, Bajaj Finance, Maruti Suzuki, Nestle உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன.Hindalco, Dr Reddy’s Labs, Sun Pharma, Hero MotoCorp, Trent நிறுவன பங்குகள் சரிவை கண்டன. Can Fin Homes, Delhivery, Gujarat Gas, Mahindra Holiday, Sunteck Realty, Cera Sanitary, Sonata Software உள்ளிட்ட 230க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் கடந்த ஓராண்டில் இல்லாத வீழ்ச்சியை கண்டன. தகவல் தொழில்நுட்பத்துறை, உலோகம், ஆற்றல், பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட்துறை பங்குகள் அரை முதல் 1 விழுக்காடு வரை சரிந்தன. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் 160 ரூபாய் உயர்ந்து இதுவரை இல்லாத புதிய உச்சமாக 64 ஆயிரத்து 600 ரூபாயாக விற்பனையாகிறது. கடந்த சனிக்கிழமை சவரன் 64 ஆயிரத்து 360 ரூபாயாக விற்கப்பட்ட ஆபரணத்தங்கம் விலை, திங்கட்கிழமை சவரனுக்கு மேலும் 80 ரூபாய் உயர்ந்து 64ஆயிரத்து 440 ரூபாயாக விற்கப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 64 ஆயிரத்து600 ரூபாயாக புதிய உச்சம் தொட்டது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் உயர்ந்த தங்கம் 8075 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 108 ரூபாயாக விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ 1லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *