22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

பெரிய மாற்றமின்றி முடந்த சந்தைகள்..

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 55 புள்ளிகள் சரிந்து 79,486 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 51 புள்ளிகள் வீழ்ந்து 24,148 புள்ளிகளில் வணிகத்தை முடித்தன. M&M, Titan Company, Tech Mahindra, Infosys,Nestle உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. Coal India, Tata Steel, Trent, Asian Paints, Shriram Finance உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மட்டும் 0.7விழுக்காடு லாபத்தை சந்தித்தன.
ஊடகம், பொதுத்துறை வங்கிகள், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை , ஆற்றல் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 1முதல் 2 விழுக்காடு வரை சரிவை கண்டன. நவம்பர் 8 ஆம் ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கம் விலை
பெரிய அளவில் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் 85 ரூபாய் உயர்ந்து 7ஆயிரத்து 285 ரூபாயாகவும், ஒரு சவரன் 58 ஆயிரத்து 280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 1ரூபாய் உயர்ந்து 103 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே நகை தொடர்பாக குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *