பெரிய மாற்றமின்றி முடிந்த சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகள், வெள்ளிக்கிழமை லேசான ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 56 புள்ளிகள் உயர்ந்து, 81,709புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 30 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 677 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது. Bajaj Auto, Axis Bank, SBI Life, Tata Motors, Maruti Suzuki உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தன. Adani Ports, Cipla, Bharti Airtel, HDFC Life, Asian Paints உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு பெரிதாக வீழ்ந்தன. தகவல் தொழில்நுட்பம், ஊடகம் தவிர்த்து மற்ற அனைத்து துறை பங்குகளும் லாபத்தில் முடிந்தன. குறிப்பாக ஆட்டோமொபைல், உலோகம், எப்எம்சிஜி, டெலிகாம் மற்றும் பொதுத்துறை வங்கிப் பங்குகள் 0.3 விழுக்காடு முதல் 1 விழுக்காடு வரை லாபம் கண்டன. Anand Rathi, City Union Bank, Coforge, Deepak Fertilisers, eClerx Services, HCL Technologies, Indian Hotels, Laurus Labs, MCX India, Medplus Health, Paytm, Oracle Financial Services, PB Fintech, Persistent Systems, Piramal Enterprises, Tech Mahindra Tech Mahindra உள்ளிட்ட 230க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கம் விலை ஒரு கிராம்25 ரூபாய் விலை குறைந்து 7115 ரூபாயாகவும், ஒரு சவரன் 56,920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி 101 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சத்து ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.