லேசான சரிவில் முடிந்த சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகள், திங்கட்கிழமை லேசான சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200புள்ளிகள் சரிந்து, 81,508புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 58 புள்ளிகள் சரிந்து 24ஆயிரத்து 619 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது. L&T, Wipro, SBI Life Insurance, BPCL, Tata Steel. உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தன Tata Consumer, HUL, Tata Motors, Axis Bank, Nestle Indiaஉள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு பெரிதாக வீழ்ந்தன. ஊடகம் மற்றும் எப்எம்சிஜி நிறுவன பங்குகள் 2 விழுக்காடு சரிந்தன. மருந்து, பொதுத்துறை வங்கிகள், ஆட்டோமொபைல், ஆற்றல் உள்ளிட்டதுறை பங்குகள் அரைவிழுக்காடு வரை சரிவை கண்டன. உலோகத்துறை பங்குகள் 0.6 விழுக்காடு ஏற்றம் கண்டன. Anand Rathi, Ceat, Chalet Hotels, City Union Bank, Coforge, Dixon Technologies, EID Parry, HDFC Bank, Indian Hotels, L&T, Lloyds Metals, Max Healthcare, Paytm, PB Fintech, Persistent Systems, Tech Mahindra, Welspun Corp, Wipro, Zomatoஉள்ளிட்ட 280க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. திங்கட்க்கிழமை ஆபரணத்தங்கம் விலை ஒரு கிராம் 15 ரூபாய் விலை உயர்ந்து 7130 ரூபாயாகவும், ஒரு சவரன் 57,040 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி 100 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.