மோசமான சரிவில் சந்தைகள்.

இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 15ஆம் தேதி சரிந்து விழுந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 453 புள்ளிகள் சரிந்து 72,643 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 123புள்ளிகள் சரிந்து 22,023 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் 5 விழுக்காடு வரை உயர்ந்தன.
சொமேட்டோ,ரயில்டெல் நிறுவனம்,ஷக்தி பம்ப்ஸ் ஆகியன விலை உயர்ந்து முடிந்தன. பயோகான்,கேபிஐ எனர்ஜி ஆகிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. வர்த்தக நேர முடிவில் 1724 பங்குகள் முன்னேற்றம் கண்டன, 1939 பங்குகள் சரிவை கண்டன. 113 பங்குகள் மாற்றமின்றி முடிந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை முன்தின விலையை விட சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. . ஒரு கிராம் தங்கம் 6125 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 49ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை,மாற்றமின்றி 80 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 80 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்