22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

மீண்டும் சரிந்த சந்தைகள்..

இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை கடும் சரிவு காணப்பட்டது கடந்த 19 ஆம் தேதி சரிவில் இருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் வியாழக்கிழமை கடுமையாக வீழ்ந்தன. அதானி நிறுவனத்தின் மீதான புகார் காரணமாக அது சார்ந்த பங்குகள் பெரிதாக வீழ்ந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 422 புள்ளிகள் சரிந்து 77,155 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 168 புள்ளிகள் குறைந்து 23,349 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. Adani Enterprises, Adani Ports, SBI Life Insurance, NTPC, SBIஉள்ளிட்ட நிறுவனங்கள் பெரிதாக சரிந்தன. Power Grid Corp, UltraTech Cement, Hindalco Industries, HCL Tech ,Grasim Industries உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை சந்தித்தன. நவம்பர் 21 ஆம் தேதியான வியாழக்கிழமை ஒரே நாளில் தங்கம் விலை 240 ரூபாய் உயர்ந்து 57,160 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் உயர்ந்து 7,145 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி101 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் செய்கூலி சேதாரம் கடைக்கு கடை மாறுபடும், ஜிஎஸ்டி நிலையாக 3 விழுக்காடு வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *