மீண்டு எழுந்த சந்தைகள்..
ஆகஸ்ட் 14 ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசாக உய்ரந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 149 புள்ளிகள் உயர்ந்து 79ஆயிரத்து 105 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 4 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 143 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. TCS, HCL Technologies, Infosys, Tech Mahindra,BPCLஉள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. Divis Labs, Hero MotoCorp, Coal India, ONGC,UltraTech Cement உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை கண்டன. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மட்டும் ஒன்றரை விழுக்காடு அளவுக்கு ஏற்றம் கண்டன. மற்ற துறையைச் சேர்ந்த அனைத்து பங்குகளும் குறிப்பிடத்தகுந்த வீழ்ச்சியை கண்டன. PB Fintech, Torrent Pharma, TVS Motor, Ajnata Pharma, Oil India, Marksans Pharma, Gravita India, Sarda Energy, Edelweiss Financial Services, Inox Wind Energy,உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது. புதன்கிழமை ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் விலை குறைந்து 6 ஆயிரத்து 555 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 440 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 88 ரூபாயாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 88ஆயிரம் ரூபாயாக உள்ளது தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.