22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

சரிவில் முடிந்த சந்தைகள்.

இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 13 ஆம் தேதி பெரிய நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 906புள்ளிகள் சரிந்து 72,761 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 338 புள்ளிகள் குறைந்து 21,997 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையில் ITC, UltraTech Cement, HCL Technologies, Kotak Mahindra Bank, ICICI Bank ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Adani Enterprises, Coal India, Adani Ports, Power Grid Corporation, NTPCஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. தகவல் தொழில்நுட்பத்துறை தவிர்த்து மற்ற அனைத்துத்துறை பங்குகளும் சிவப்பு நிறத்தில் நஷ்டத்திலேயே முடிந்தன. ரியல் எஸ்டேட், ஊடகம், பொதுத்துறை வங்கிகள், டெலிகாம், ஆற்றல் மற்றும் எண்ணெய்த்துறை பங்குகளும், உலோகத்துறை பங்குகளும் 4 முதல் 6 விழுக்காடு வரை சரிந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை முன்தின விலையை விட சவரனுக்கு 320 ரூபாய் சரிந்தது. . ஒரு கிராம் தங்கம் 6110 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 48ஆயிரத்து 880 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை,கிராமுக்கு 1ரூபாய் சரிந்து 78 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 1000ரூபாய் குறைந்து 78 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *