பெரியளவில் மாற்றமின்றி முடிந்த சந்தைகள்..
ஆகஸ்ட் 19 ஆம் தேதி திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிந்து 80ஆயிரத்து 424 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி32 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 572 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது.
Hindalco Industries, BPCL, Shriram Finance, Tata Steel, LTIMindtree உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. M&M, Bajaj Auto, Axis Bank, IndusInd Bank,SBI Life Insurance உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை கண்டன. ஆட்டோமொபைல் மற்றும் வங்கித்துறை பங்குகளை தவிர்த்து மற்ற துறை பங்குகள் உயர்ந்து முடிந்தன. சுகாதாரம், தகவல் தொழில் நுட்பம், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆற்றல்,டெலிகாம் துறை மற்றும் ஊடகத்துறை பங்குகள் அரை முதல் 2 விழுக்காடு வரை உயர்ந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஆகஸ்ட் 19 ஆம் தேதி திங்கட்கிழமை ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 670 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 360 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி 91 ரூபாயாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 91ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.