மல்லையா கம்பெனியை வாங்கி பெரிய ஆளான சகோதரர்கள்..
திங்கிரா சகாதரர்கள்தான் இந்த பாராட்டுக்களுக்கு சொந்தக்காரர்கள்..குல்தீப் மற்றும் குருபச்சன் சிங் திங்க்ரா என்ற இந்த சகோதரர்கள், பெர்ஜெர் பெயின்ட் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் 10,619 கோடி ரூபாய்க்கு வணிகத்தை செய்தது. இந்தியாவின் இரண்டாவது பெரிய பெயின்ட் நிறுவனமாக உருவெடுத்தது. முதல் இடத்தில் ஏசின் பெயின்ட்ஸ் இருக்கிறது. பெர்ஜெர் பெயின்ட் நிறுவனம் இந்தியா மட்டுமின்றி ரஷ்யா, போலந்து, நேபாளம் மற்றும் வங்கத் தேசத்திலும் கிளைகள் திறக்கப்பட்டன. இந்த சகோதரர்களுக்கு சொத்துமதிப்பு மட்டும் 8.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் கூறுகிறது. கடந்த 1990களில் விஜய் மல்லையாவிடம் இருந்து பெர்ஜெர் பெயின்டை வாங்கியிருந்தனர். புதுமையான பல திட்டங்களால் அந்த நிறுவனத்தை மிக லாபகரமாக மாற்றியுள்ளனர். திங்க்ரா குழுமத்தின் அடுத்த தலைமுறையினர் பெர்ஜெர் பெயின்ட் நிர்வாகத்தை பார்த்து வருகின்றனர். குல்தீப் சிங் திங்க்ராவின் மகள் ரிஶ்மா கவுர் மற்றும் குருபச்சான் சிங்கின் மகன் கன்வர்தீப் ஆகியோரும் இணைந்து பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் அலுவலகம் கொல்கத்தாவில் இடம்பிடித்துள்ளது. உலகளவில் மிக நல்ல பெயரை பெர்ஜெர் பெயின்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.