இந்தியாவில் 200 கோடி முதலீடு செய்யும் மெர்சிடீஸ் பென்ஸ்
பிரபல ஜெர்மனி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் 200கோடி ரூபாய் அளவுக்கு இந்தாண்டு முதலீடுகள் செய்ய திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 12க்கும் மேற்பட்ட கார்களில் 3 மின்சார கார்களாக உற்பத்தி செய்யவும் பணிகள் நடக்கிறதாம். டாப் என்ட் எனப்படும் தரமான கார்களாக இவை இருக்கப்போகிறது. இந்த கார்களின் விலை 1.5 கோடி ரூபாயில் இருந்து தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்குள் மெர்சிடீஸ் பென்ஸ் கார் அறிமுகமாகி இந்தாண்டுடன் 30 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. புனேவில் உள்ள ஆலையில் மட்டுமே 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த முதலீடு மூலம் இந்தியாவிற்குள் இதுவரை 3ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கான அதிகாரியும் தலைமை செயல் அதிகாரியுமான சந்தோஷ் ஐயர் தெரிவித்துள்ளார். 200கோடிரூபாய் முதலீடு என்பது புதிய உற்பத்தி ஆலைகள், புதிய ஸ்டார்ட்அப் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக இந்த தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 17,408 கார்களை இந்தியாவிற்குள் மெர்சிடீஸ் பென்ஸ் கார் விற்பனை நடந்திருக்கிறது. இது கடந்த 2022-ஆம் ஆண்டைவிட 10%அதிகமாகும்.
அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகன விற்பனை 25%உயரும் என்றும் சந்தோஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிகரித்து வரும் சார்ஜிங் கட்டமைப்பு மற்றும் எப்படி சார்ஜ் செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் மின்சார மெர்சிடீஸ் கார்களை வாங்கத்தூண்டுகிறது.