22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

சொகுசு கார்களை வாங்கிக்குவிக்கும் இந்தியர்கள்..

2024-ல் இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது 50லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கார்கள் ஒரு மணிநேரத்துக்கு 6கார் விற்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மணி நேரத்துக்கு 2 கார்கள் மட்டுமே விற்கப்பட்டன. வரும் புத்தாண்டில் மட்டும் 20க்கும் மேற்பட்ட புதிய சொகுசு கார்கள் அணிவகுக்க இருக்கின்றன. முதல் முறையாக 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் அடுத்தாண்டு விற்கப்படும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 2025ஆம் ஆண்டு சொகுசு கார்கள் விற்பனை என்பது 8 முதல் 10%வரை வளரும் என்று ஆவ்டி நிறுவனத்தின் தலைவரான பல்பீர் சிங் டில்லான் தெரிவித்துள்ளார். பெருந்தொற்றுக்கு பிறகு இந்தியாவின் சொகுசு கார் விற்பனை நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறியுள்ளார். மெர்சிடீஸ் நிறுவனத்தின் தலைவரான சந்தோஷ் ஐயரும் இதே கருத்தை முன்வைக்கிறார். இந்தியாவில் மெர்சடீஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்கள் தான் அதிகம் விற்கப்படுகின்றன.
இந்தியாவில் 2024-ல் மட்டும் 20,000 கார்கள் விற்கப்பட்டுள்ளன. முதல் நான்கு 9 மாதங்களில் மட்டும் 14,379 கார்களை விற்றுள்ளதாக பென்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஜனவரியில் இருந்து செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 10,556 கார்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்றுள்ளது. இந்தியாவைப்போலவே சீனா, துருக்கி மலேசியாவிலும் சொகுசு கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. 2024-ல் 50 ஆயிரமாக விற்கப்பட்ட சொகுசு கார்கள் அடுத்தாண்டு 55 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *