மெட்டா – சாம்சங் !!!
பேஸ்புக்கின் தாய் நிறுவனமாக கருதப்படும் மெட்டா நிறுவனத்தில் அண்மையில் 11ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சூழலில் இந்தியாவின் கொள்கை பிரிவு தலைவராக இருந்த ராஜிவ் அகர்வால் தற்போது அதற்கு நிகரான பதவியில் சாம்சங் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். மெட்டாவில் இருந்த ராஜிவ் அகர்வாலும், வாட்ஸ் ஆப்புக்கு தலைமை வகித்த அபிஜித் போஸ் உள்ளிட்டோரும் பணியில் இருந்து விலகியுள்னர் என மெட்டா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவுக்கு போட்டியாக மின்னணு சாதனங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ள சூழலில்
ராஜிவ் அகர்வால் சாம்சங்கில் இணைந்துள்ளார். மொபைல் போன் உற்பத்தியில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகைகளை பெறுவது எப்படி என சாம்சங் தீவிரம் காட்டி வருகிறது ஊபர் தொழில்நுட்ப நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் பதவியையும் அகர்வால் வகித்து வந்தார்.