20% சரிந்த சந்தைகள்..

தேசிய பங்குச்சந்தையான NSE-யில் சிறு மற்றும் குறு நிதிகளான micro And smallcap பங்குகள் கடந்தாண்டு அதன் உச்சத்தில் இருந்து தற்போது 20% வரை சரிந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொழில்நுட்ப ரீதியில் பீயர் என்று கூறுவார்கள். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நிஃப்டி ஸ்மால்கேப் 250 மற்றும் மைக்ரோ கேப் 250 ஆகிய சந்தை குறியீடுகளில் இருந்து முறையே 21.4 மற்றும் 20.2% அளவுக்கு சரிவு இருப்பதை பங்குச்சந்தை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். மிட்கேப் எனப்படும் நடுத்தர சந்தை குறியீடு கடந்தாண்டு செப்டம்பரில் இருந்து தற்போது வரை 17.7%ஆக குறைந்துள்ளது. சராசரியாக சிறிய மற்றும் குறு முதலீட்டு நிறுவனங்கள் 20 விழுக்காடு சரிந்துள்ள நிலையில், சில நிறுவனங்களின் பங்குகள் 30 முதல் 80 விழுக்காடு வரை கூட சரிந்துள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தை விற்று பணம் பார்க்க முயற்சித்ததால் இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு பிறகு 30 விழுக்காடு வரை சரிவை கண்டுள்ளன. 30 முதல் 50 விழுக்காடு வரை சரிந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 79 ஆகவும், நடுத்தர பங்குகளில் 80 நிறுவனங்களும் உள்ளன என்கிறது புள்ளி விவரம்