லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்….
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பஞ்சின் அளவு கடந்த மாதம் மட்டும் 40% குறைந்துள்ளது. ஆயிரத்து 310 மில்லியன் அமெரிக்க டாலர்களாக கடந்தாண்டு செப்டம்பரில் இருந்த ஏற்றுமதி,இந்தாண்டு 767 மில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது
இந்த மிகப்பெரிய சரிவு பல லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்துள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலும் ஜவுளி ஏற்றுமதிக்கு தேவை குறைந்துள்ளதே இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.மேலும் ஆந்திரா மற்றும் சூரத்தில் ஜவுளித்துறை பணியாளர்களின் வேலை நேரம் குறைப்பின் காரணமாக பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை நம்பியுள்ள திருப்பூர் பின்னலாடை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் 7 நாட்களும் இயங்கி வந்த ஆடை உற்பத்தி ஆலைகள் தற்போது குறைவான ஆர்டர் காரணமாக 5 நாட்கள் மட்டுமே இயங்குவதாக வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
H&M, tommy hilfigher உள்ளிட்ட நிறுவனங்களின் ஆர்டர்கள் கிட்டத்தட்ட சரிபாதியாக குறைந்துள்ளதால் ஆடை வணிகர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தீபாவளிக்கு மட்டும் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர்கள் கொரோனா காலத்துக்கு முன்பு கிடைக்கும் நிலையில் இந்தாண்டு 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கூட ஆர்டர்கள் வரவில்லை என்கிறார்கள் ஆடை உற்பத்தியாளர்கள். ஆடை வாங்கும் அளவுக்கு மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.