22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
கருத்துகள்செய்திதொழில்துறை

மின்சார வாகன சந்தையில் அறிமுகமாகும் மஹிந்திரா & மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 2024 டிசம்பரில் தொடங்கி 2027 ஆம் ஆண்டிற்குள் ஐந்து மின்சார வாகனங்களை அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

2027 ஆம் ஆண்டளவில் அதன் விற்பனையில் 30% EV களில் இருந்து வரும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ஐந்து எலக்ட்ரிக் எஸ்யூவிகள் எக்ஸ்யூவி மற்றும் பிஇ ஆகிய இரண்டு பிராண்டுகளின் கீழ் இந்த வாகனங்கள் விற்பனை செய்யப்படும்.

அண்மையில் புதிய வாகனத் திட்டங்கள், பேட்டரி செல் உற்பத்தியை உள்ளூர்மயமாக்குதல் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகிய ஒப்பந்தத்தில் Volkswagen மற்றும் Mahindra கையெழுத்திட்டன.

மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் மின்சார வாகன (நான்கு சக்கர வாகனங்கள்) வணிகத்தில் $9 பில்லியன் வரை மதிப்பீட்டில் $250 மில்லியன் முதலீடு செய்தது. FY27 க்குள் 200,000 மின்சார வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அது கூறியது.

தற்போது மஹிந்திரா மற்றும் மஹிந்திரா சந்தையில் எலக்ட்ரிக் SUVகளை கொண்டிருக்கவில்லை.

அதே சமயம் போட்டி நிறுவனங்களான Tata Motors மற்றும் MG Motor India மின்சார வாகன சந்தையில் கணிசமான பகுதியை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *