கூகுளில் அதிகம் பேருக்கு வேலை போகுது..
உலகளவில் பிரபல நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் ஜனவரி முதல் வாரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை பறிபோயுள்ளது. தி வெர்ஜ் என்ற அமெரிக்க பத்திரிகை இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி ஏராளமான தொழிலாளர்களுக்கு சுந்தர் பிச்சை மெமோ அனுப்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதலீடுகளை அதிகரிக்க சில கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டியிருப்பதாக சுந்தர்பிச்சை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தாண்டில் மட்டும் 12 ஆயிரம் பணியாளர்களை வெளியேற்ற கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. யூடியூப் தளத்தல் இருந்து 100 பணியாளர்களை நீக்கியுள்ள கூகுள், தற்போது 7173 பணியாளர்களை தன்வசம் வைத்திருக்கிறது. உலகளாவிய விளம்பரங்களை கையாளும் பிரிவிலும் மனிதர்களை வேலையைவிட்டு நீக்கி விட்டு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. இது புறம் இருக்க, டிவிட்ச் என்ற வலைதளத்தில் இருந்து 500 பணியாளர்களை அமேசான் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. அண்மையில் கூகுள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு ஆய்வு தயாரிப்பான ஜெமினியை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு போட்டியில் குதித்துள்ளது.