8.69% பங்குகளை விற்றாரா வாடியா?

பாம்பே டையிங் நிறுவனத்தின் தலைவராக உள்ள நுஸ்லி வாடியா மீது புகார் ஒன்று எழுந்துள்ளது. அதில் 8.69% FE DINSHAW நிறுவனத்தின் பங்குகளை வாடியா விற்றதாகவும் இது சட்டவிரோதம் என்பதே புகார். குறிப்பிட்ட இந்த நிறுவன பங்குகள் 1920 முதல் டாடா குழுமத்திடம் இருந்த நிலையில் 1970-கிளில் இந்த பங்குகள் ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்துக்கு கைமாறியுள்ளன. அன்று விற்பனை செய்யப்பட்ட பங்குகளின் தற்போதைய விலை 1.2லட்சம் கோடி ரூபாயாகவும் இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட இந்த பங்குகளில் மட்டும் ஆயிரம் ஏக்கர் நிலமும் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு இந்த நிலத்துக்கு வாடியா உரிமை கொண்டாடினார். 1940-ல் தீன்ஷா உயிரிழந்தார். அவரின் மூன்று குழந்தைகளும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டனர். 8.69 விழுக்காடு பங்குகள் FE தீன்ஷாவின் நிறுவனம் வைத்திருநத்தாகவும், 1920-ல் 2 கோடி ரூபாய் கடனை கட்டாததால் அந்த பங்குகளை டாடா வாங்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட இந்த நிறுவனம் சைரஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்று கடந்த 2008-ம் ஆண்டில் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. மூன்று முக்கியமான ஆவணங்களை வாடியா மோசடி செய்தார் என்றும் தீன்ஷா அறக்கட்டளையில் இருந்து தமது பெயருக்கு சொத்துகள் மாற்ற இந்த முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. பங்கஜ் பாட்நிஸ் என்பவர் இந்த பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். தீன்ஷா அறக்கட்டளை இடத்தில் 3 கோடி சதுரடி நிலம் சர்ச்சைக்கு உள்ளனாதாக இருப்பதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.