பரஸ்பர வரி விதிப்பு அமல்..

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரிகளை விதிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இதன்படி அனைத்து நாடுகளுக்கும் அடிப்படையாக 10 விழுக்காடு இறக்குமதி வரியாகவும், சில நாடுகள் மீது ஏகப்பட்ட வரிகளையும் சுமத்தியுள்ளார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நியாயமற்ற வரிகள் விதிக்கப்படும் நிலையில், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பரஸ்பர வரி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
பரஸ்பர வரியில் கிடைக்கும் பணத்தை கொண்டு அரசின் செலவினங்களை செய்துகொள்ள முடியும். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து அமெரிக்காவின் நிதிச்சுமையை குறைக்க முடியும் என்று அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்க கடன் தொகையானது 2025-2034 வரையிலான காலகட்டத்தில் 4.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பு முறையால் அமெரிக்காவில் விரைவில் அனைத்து பொருட்களின் விலையும் உயரப்போகிறது. குறிப்பாக மெக்சிகோவில் இருந்து வரும் பொருட்களின் விலையோ மிக விரைவாக உயரப்போகிறது. பிற நாடுகளில் அமெரிக்க பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கிறார்கள் என்பதை பார்த்தால், அமெரிக்க பொருட்களுக்கு வெறும் 2.2% வரிதான் விதிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலோ 2.7%வரி விதிக்கப்படுகிறது.சீனாவில் அமெரிக்க பொருட்களுக்கு 3%, இந்தியாவிலோ 12% வரி வசூலிக்கப்படுகிறது. டிரம்புக்கு முன்பு இருந்த அதிபர்களும், அமெரிக்க பொருட்களின் மீதான வரி குறித்து பேச்சுவார்த்தையை பலகாலம் நடத்தியுள்ளனர். உருகுவே பகுதியில் நடந்த பேச்சுவார்த்தையில் 123 நாடுகள் உலகளாவிய வர்த்தக முறையை 40 ஆண்டுகளாக பயன்படுத்தியுள்ளன. பரஸ்பர வரி விதிப்பில் இந்தியாவுக்கு அமெரிக்கா 26 %வரியை விதித்துள்ளது.