e-ஜெனிசிஸ் நிறுவன பங்குகளை வாங்கிய நாட்கோ..
நாட்கோ பார்மா நிறுவனம் , இ-ஜெனிசிஸ் என்ற உயிரிநுட்ப நிறுவனத்தின் 4 கோடி பங்குகளை வாங்கியுள்ளது. இ-ஜெனிசிஸ் நிறுவனம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மனி உடல் உறுப்புகளை பாதுகாப்பாக எடுத்துச்செல்ல உதவும் நிறுவனமாகும். ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நாட்கோ பார்மா , கனடாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இ-ஜெனிசிஸ் நிறுவன பங்குகளை வாங்குவது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. கிட்னி மற்றும் கல்லீரல், இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு இ-ஜெனிசிஸ் நிறுவன நுட்பங்கள் பெரிதும் உதவி செய்கின்றன. நாட்கோ நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக இ-ஜெனிசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது., இ-ஜெனிசிஸ் நிறுவனம்தான் கடந்த 2024ஆம் ஆண்டு பன்றியின் கிட்னியை மனிதருக்கு மாற்றி உலக சாதனை நிகழ்த்தியது. இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து தர சான்று நிர்வாக அமைப்பான FDA ஒப்புதல் அளித்து சான்றளித்தது குறிப்பிடத்தக்கது.