அந்த பணம் மக்களுக்குத்தான் போகணும் – நிதி அமைச்சர்
தேசிய பென்ஷன் திட்டத்தில் சேரும் பணம் மக்களுக்குத்தான் போகணும், அரசுக்கு இல்லை….மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் ஷிம்லாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது பேசிய அவர் தேசிய பென்ஷன் திட்டத்தில் தனிநபர்கள் சேர்த்து வைத்த பணத்தை விதிப்படி மாநில அரசாங்கங்கள் எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.பழைய பென்ஷன் திட்டம் குறித்து நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நிதியமைச்சர்தேசிய பென்ஷன் திட்டம் மக்களுக்கானது என்றும் மாநில அரசுகள் எடுக்க கூடாது என்றும் திட்டவட்டமா தெரிவித்தார்.காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பேசிய நிதியமைச்சர் , தேசிய பென்ஷன் திட்டத்தில் கிடைக்கும். பணத்தை ஏன் மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என்று கேள்விஎழுப்பினார். இமாச்சலபிரதேசத்தில் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இதில் 1.75 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தலை சந்திக்க உள்ளனர். அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அளிக்க உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ள நிலையில் மத்திய அமைச்சரின் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.