இது நெஸ்ட்லே அப்டேட்..
இந்தியாவில் நடுத்தர வருவாய் உள்ளோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால் FMCGதுறையில் முன்னணி நிறுவனங்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. வழக்கமான வணிகத்தை விட ஆன்லைனில் பொருட்களை வாங்கவே பலரும் விரும்பி வருவதாக நெஸ்ட்லே இந்தியா நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சுரேஷ் நாராயணன் கூறியுள்ளார். அதிக விலையும் இல்லாமல், குறைவான விலையும் இல்லாமல் நடுத்தரத்தில் இருக்கும் உணவுப் பொருட்களை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. பெருந்தொற்று மற்றும் பொருளாதார மந்தநிலையின்போது தங்கள் நிறுவனத்தின் சாக்லெட் வணிகம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான காலாண்டு விற்பனை வளர்ச்சியை கடந்தவாரம் நெஸ்ட்லே நிறுவன பங்குகள் சரிந்தன.
பெரிய நகரங்கள் மற்றும் மெட்ரோ நகரங்கள் என இருவேறு சந்தைகள் இருப்பதாக கூறிய சுரேஷ், பால், ஊட்டச்சத்து மற்றும் சாக்லெட் துறை பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. மேகி, கிட்கேட் மற்றும் மில்க் மெய்டு ஆகிய பொருட்களின் விற்பனை இரட்டை இலக்கங்களில் இருப்பதாகவும் சுரேஷ் கூறினார். காபி மூலப்பொருட்களின் விலை 60 விழுக்காடு வரை உயர்ந்ததால், வேறு வழியின்றி காபியின் விலையை 15 முதல் 30 விழுக்காடு வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். நெஸ்ட்லே நிறுவனத்தின் மின்வணிகம் மட்டும் 38% அதிகரித்துள்ளது. அதிலும் பாதி அளவு துரித வணிகத்தில் ஆர்வம் காட்டியுள்ளனர். பண்டிகை நாட்களில் இன்னும் அதிக விற்பனை இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் நெஸ்ட்லே நிறுவன இந்தியத் தலைவர் கூறியுள்ளார்.