ஏற்றுமதி அதிகரிக்க புதிய பலே திட்டம்
இந்தியாவில் இருந்து மின் வணிகம் ஏற்றுமதியை சீனவைப்போல எல்லைகளை கடந்து மற்ற நாடுகளுக்கு அனுப்பு உதவும் வகையில், அனுப்பி வைக்க சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. கிரீன் சேனல் எனப்படும் பிரத்யேக பாதை உருவாக்குதால் இந்தியாவிற்கு அருகே உள்ள நாடுகளுக்கு அனுப்பி வைக்க மிகவும் எளிதாக மாறிவிடும்.
இதற்கென பேச்சுவார்த்தையை வர்த்தகத் துறை மேற்கொண்டு வருகிறது.
இதன் முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள், உகந்த சூழல் இருக்கிறதா என்பது பற்றியும் பேச திட்டமிட்டுள்ளனர்.
மின்வணிக சாதனங்கள் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டுமெனில் அதற்கு உண்டான கிடங்கு வசதிகளும் தேவை என்பதால் அது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கிடங்குகள் விமான நிலையங்களுக்கு அருகே இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லேபிள் பிரிவு, பரிசோதனை மற்றும் மீண்டும் பேக்கிங் செய்யும் வசதியும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் பொருட்களை விற்கவும், ரிட்டன் எடுக்கவும் இந்த புதிய திட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் இதுபோன்றதொரு முறைஇருப்பதால் அதே பாணியில் இந்தியாவிலும் இந்த திட்டம் விரைவில் அமலாக இருக்கிறது.
2030ஆம் ஆண்டுக்குள் பொருட்கள் ஏற்றுமதியில் 1 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சாத்தியப்படுத்த கிராஸ் பார்டர் எனப்படும் வேறு நாடுகளுக்கு அனுப்பும் முறை சிறந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவில் போஸ்டல் மற்றும் கொரியர் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் சந்தை 1.5பில்லியன் டாலர்கள் அளவு கொண்டதாகும்.