சமூகவலைதள புகார்களை விசாரிக்க புதிய குழு
இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் பல புதிய மாற்றங்கள் அடுத்தடுத்து செய்யப்பட்டு வருகிறது
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விசாரிக்கும் புதிய குழுவை அமைக்க மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் வரைவு அறிக்கை தாக்கலான அடுத்த 90 நாட்களில் இந்த குழு பணியை தொடங்க இருக்கிறது. டிவிட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவோருக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்படும்பட்சத்தில் எல்லாவற்றிற்கும் நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியம் இருக்காது. நீதிமன்ற வழக்குகளால் ஏற்படும் நேர தாமதத்தை குறைக்கவே இந்த புதிய குழு உருவாக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது திருத்தப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்க கடந்த ஜூன் மாதத்திலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டது,இதில் கிடைத்த தரவுகளை வைத்து இறுதி செய்யும் பணிகள் அடுத்த சிலநாட்களில் முடிவடைய உள்ளன. மிகவும் முக்கியமான பிரச்சனைகளுக்கு 24 மணி நேரத்துக்குள் தீர்வு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குழுவில் மொத்தம் 3 பேர் இருப்பார்கள் ஒரு முன்னாள் அரசு அதிகாரி மற்ற இருவர் சுதந்திரமான துறை சார்ந்த நிபுணர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. புதிய குழுக்களை மத்திய அரசு ஒன்றை அமைக்கலாமா இல்லை தேவைக்கு ஏற்ப அமைக்கலாமா என்று இன்னும் இறுதி செய்ய வில்லை. இந்த விவகாரத்தில் அரசின் இந்த குழு அமைக்கும் முடிவுக்கு தனியார் சமூகவலைதள நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.எனினும் என்ன செய்யலாம் என்ற தீர்வுடன் வரும்படி நிறுவனங்களை மத்திய அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது