புதுசு… கண்ணா புதுசு…!!!!
Flex fuel வாகனங்கள் என்பது கிடைக்கும் எரிபொருளை வைத்து வாகனத்தை இயக்கும் சிறப்பு வாகனங்களாகும். டொயோட்டா நிறுவனம் இந்த வகை வாகனத்தின் உற்பத்தியை சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் கொரோல்லா ரக காரில் முழுமையாக பெட்ரோல் நிரப்பி இயக்கலாம் அல்லது 20 முதல் 85%எத்தனால் கலந்தும் பயன்படுத்தலாம். இரண்டுமே இல்லை என்றாலும் மின்சார காராகவும் பயன்படுத்தும் ஹைப்ரிட் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வகை வாகனங்கள் சந்தைக்கு அதிகம் வரும்பட்சத்தில், எரிபொருள் விலையேற்றம், கரியமில வாயு வெளியேற்றம் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கரியமில வாயு வெளியேற்றத்தை தடுக்க இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் எத்தனால் பயன்பாட்டை 2025ம் ஆண்டுக்குள் 20%ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளுடன் எத்தனால் கலந்தால் பெட்ரோல் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் உற்பத்தியாகும் கரும்பின் அளவைப் பொருத்தே எத்தனால் உற்பத்தி இருக்க உள்ளதால் எரிபொருள் விலையேற்றத்தைப் போல இதுவும் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும்.
பிளக்ஸ் ஃபியூல் வகை வாகனங்கள் வருங்காலத்தில் சிறந்தபலன்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகை வாகனங்களை தயாரிக்க எந்தவிதமான பெரிய செலவும் கூடுதலாக ஆகாது என்பதால் வருங்காலத்தில் அதிக வாகனங்கள் இந்த வகையில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.