புதிய மின்சார வாகன கொள்கை அப்டேட்…
புதிய மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய மத்திய அரசு புதிய கொள்கையை வரையரை செய்திருக்கிறது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கொள்கையின்படி குறைந்தபட்சம் 4150 கோடி ரூபாய் இந்தியாவில் முதலீடு செய்திருக்க வேண்டும், 3 ஆண்டுகளுக்குள் மின்சார கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் ,அதே நேரம் கால் பங்கு அளவுக்கு பொருட்களை வாங்கவேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த கண்டிஷனுக்கு ஓகே என்றால் ஆண்டுக்கு 8ஆயிரம் மின்சார கார்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முதல் 8000 கார்களுக்கு மட்டும் 15 விழுக்காடு வரி என்றும் அதற்கு அதிகமாக உள்ள மின்சார கார்களுக்கு 70 மற்றும் 100 விழுக்காடு வரி இறக்குமதிக்கு விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மின்சார வாகன கட்டமைப்பை வலுப்படுத்தவும்,இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை வலுப்படுத்தவும் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 6,484 கோடி ரூபாய் வரை உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்புகளை பல நிறுவனங்களும் வரவேற்றுள்ளன. இதனால் பொருளாதாரம் வளரும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முதலீட்டு உத்தரவாதத்தை வங்கிகள் அளிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.