வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி!!!
உலகளவில் அதிகம்பேர் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப்பில் கால் லிங்க் என்ற வசதி அறிமுகமாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பர்க் அறிவித்துள்ளார்
இதன்படி கால் பேச விரும்பும் நபர் ஒரு லிங்கை தயார் செய்யலாம்.அந்த நபர் தனக்கு தேவைப்படுவோருக்கு இந்த லிங்கை அனுப்பி வைக்கவேண்டும், அவ்வாறு அனுப்பப் படும் லிங்கை கிளிக் செய்தால் எதிர்முனையில் உள்ள நபர் எளிதாக அந்த காலில் இணைந்துகொள்ள முடியும்.
மேலும் தற்போது வாட்ஸ்ஆப் குரூப் காலில் அதிகபட்சம் 8 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற சூழல் உள்ள நிலையில் விரைவில் இது 32 பேர் வரை இணையும் வகையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் மார்க் ஜக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிய தொழில் வாய்ப்புகளுக்காக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தொழில் சூழலில் உள்ள பிரச்சனை மற்றும் அதற்கான தீர்வை கூறும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் அதிகபட்ச பரிசாக ரூ.1 கோடி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது