செயல்பாட்டில் இல்லாத டிரேடிங் கணக்குகளுக்கு புதிய விதி…

இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி, ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. அதில் நீண்டகாலம் பயன்பாட்டில் இல்லாத டிரேடிங் கணக்குகளை செட்டில் செய்ய முயற்சிப்பதே அந்த முயற்சி. முதலீட்டாளர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த முயற்சியை செபி கையில் எடுத்துள்ளது. தற்போதைய விதிப்படி, 30 நாட்கள் இயங்காத டிரேடிங் கணக்குகளில் உள்ள தொகையை 3 வேளை நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்று தரகு நிறுவனங்களுக்கு அறிவுரை உள்ளது. இந்த நிலையில் தினசரி கண்காணிப்புக்கு பதிலாக , 30 நாட்களில் பணம் எதுவும் இயங்காமல் இருந்தால் அதனை மாத இறுதியில் செட்டில் செய்துவிடவேண்டும் என்று புதிய விதி வர இருக்கிறது. இது தொடர்பாக தரகு நிறுவன அமைப்பான IsF இடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. தினசரி செட்டில்மன்ட்களில் சிக்கல்கள் இருப்பது பற்றி அப்போது ஆலோசிக்கப்பட்டது. புதிய விதியால், பணத்தை தவறாக பயன்படுத்துவது முற்றிலும் தடுக்கப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தேவையற்ற நிர்வாக சுமையும் குறையும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வரும் 26 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும், செபியின் மின்னஞ்சல் முகவரியிலும், இணையத்திலும் தெரிவிக்கலாம் என்று செபி கூறியுள்ளது. புதிய விதி ஏற்கப்பட்டால் உடனடியாக அமலாகும் என்று கூறப்படுகிறது.
இது அமலானால் பங்குச்சந்தை இணையதளங்களிலும் உடனடியாக அவை செயல்பாட்டுக்கு வந்துவிடும். செபியின் லீகல் என்ற பிரிவில் சர்குலர் என்ற உட்பிரிவில் இது தொடர்பான கூடுதல் விவரங்கள் இடம்பிடித்துள்ளன.