கிரிப்டோவுக்கு வருகிறது புதிய ரூல்ஸ்!!!
ஜி20 நாடுகளை இந்தியா தலைமை ஏற்று அடுத்தாண்டு நடத்த இருக்கிறது,இந்த சூழலில் மத்திய அரசு, கிரிப்டோ கரன்சிகள் குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்தாண்டு நவம்பர் இறுதி வரை இந்திய அரசு 200 ஜி20 மாநாடுகளை நடத்த உள்ளது. அதில் கிரிப்டோ கரன்சிகளை முறைப்படுத்துவது குறித்த அம்சமும் இடம்பெற வாய்ப்புள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் கரன்சிகளை முறைப்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக உலக வங்கியும் கூறியுள்ளது கிரிப்டோ கரன்சி நிறுவனங்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் செயலிகளை இந்தியர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை பற்றி ஜி20 மாநாட்டில் உரையாற்ற கோரிக்கை எழுந்துள்ளதாகவும் மத்தியநிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறுகிய காலகட்டத்தில் இந்தியர்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு மிகவும் எளிதாக மாறிவிட்டதாகவும் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.