டுவிட்டருக்கு அடுத்ததாய் லைனில் நிற்கும் அமேசான்!!!!!
அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய மின்வணிக நிறுவனமான அமேசான் கடந்த சில மாதங்களாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. நிதி இழப்பை சரிசெய்யும் நோக்கில் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுக்க அமேசான் நிறுவனம்திட்டமிட்டுள்ளது.எந்தெந்த வணிகம் நஷ்டத்தை சந்தித்துள்ளன என பட்டியலை தயாரித்துள்ள நிறுவனம், அதில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.தொடர் நிதி இழப்பை சந்தித்து வரும் வணிகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் வேறு நிறுவனத்தில் வேலை தேடிக் கொள்ள அமேசான் நிறுவனம்திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.உலகளவில் நிலவும் நிலையற்ற பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அண்மையில் அமேசான் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.புதிதாக பணியாளர்களை நிறுவனத்தில் சேர்ப்பதையும் அமேசான் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளதாகவும்ஏற்கனவே உள்ள பணியாளர்களின் அளவை குறைக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களின் அளவை குறைத்து வரும் நிலையில், அமேசான் நிறுவனமும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பாதிக்கும் சூழல் ஏற்பட்டது.