உச்சம் தொட்ட நிஃப்டி, நேற்றை விட இன்று பரவாயில்ல..
பிப்ரவரி 2 ஆம் தேதி இந்தியப் பங்குச்சந்தைகளில் லாபம் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 440 புள்ளிகள் உயர்ந்து 72,085 புள்ளிகளாக இருந்தது. இதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 156 புள்ளிகள் அதிகரித்து து 21,853 புள்ளிகளாக இருந்தது. உலகளவில் பங்குச்சந்தைகள் லாபகரமாக இருந்ததன் எதிரொலியாக இந்திய சந்தைகளில் பெரிய லாபம் காணப்பட்டது. 22,126 புள்ளிகள் என்ற உச்சத்தை தொட்ட தேசிய பங்குச்சந்தை பின்னர் வீழ்ச்சியை கண்டது. Eicher Motors, Axis Bank, HDFC Life, HDFC Bank,HUL ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. இதேபோல் BPCL, Power Grid Corporation, ONGC, Adani Ports NTPC, ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் 4 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. தகவல் தொழில்நுட்பம், உலோகம், ரியல் எஸ்டேட்,ஆற்றல் துறைகளில் பங்குகள் 2 விழுக்காடு வரை உயர்ந்தன. வங்கித்துறை பங்குகள் அரை விழுக்காடு வரை சரிந்தன. IAbbott India, Bank of India, BPCL, Castrol India, Engineers India, Hercules Hoists, HPCL, IOB, IOC, Jindal Steel, Kitex Garments, Mishtann Foods, NBCC (India), NHPC, NMDC, Oriental Hotels, Punjab & Sind Bank, SAIL, Shipping Corporation, SJVN, SpiceJet, Texmaco Infra உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 47 ஆயிரத்து120 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம், முன்தின விலையை விட 10 ரூபாய் அதிகரித்து 5890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து 78 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டியும், சரக்கு, மாறுபடும் செய்கூலி, சேதாரமும் மேலே குறிப்பிட்ட விலைகளுடன் சேர்க்கப்படவேண்டும். அவ்வாறு சேர்த்தால்தான் இறுதியாக நம் கைகளில் இருந்து கடைக்கு எவ்வளவு பணம் செல்லும் என்பது தெரியவரும். இதை நகை வாங்க விரும்புவோர் நினைவில் கொள்ளவும்