நிசான் நிறுவனத்தின் விலை ஒரு யூரோ!!!!!
ஜப்பானிய பிரபல நிறுவனமான நிசான், ரஷ்யாவில் அதன் வணிகத்தை நிறுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதனை கருத்தில் கொண்டு கார்களை உற்பத்தி செய்யும் முடிவை நிசான் நிறுவனம் மார்ச் மாதம் நிறுத்தியது.
நிலைமை கொஞ்சமும் சீரடையாததால் ரஷ்யாவில் இருந்தே முழுமையாக வெளியேற நிசான் திட்டமிட்டது. தன்னுடைய வணிக சாம்ராஜ்ஜியத்தை மொத்தமாக வெறும் 1 யூரோவுக்கு நிசான் நிறுவனம் ரஷ்ய அரசு நிறுவனமான நாமிக்கு எழுதிக்கொடுத்துவிட்டு வெளியேறியது. இதே காரணத்தால் பிரெஞ்சு நிறுவனமான ரெனோவும் அண்மையில் வெளியேறியது.
உலகின் பல நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் 697 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என முடிவெடுத்த நிசான் நிறுவனம் தன்னுடைய வணிக உறவை முடித்துக்கொண்டுள்ளது.
ரெனோ,நிசான் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து மிட்சுபிஷி நிறுவனமும் ரஷ்யாவில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.