22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

நீட்டா அம்பானியின் சம்பளம் ரூ.800..

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரான நீட்டா அம்பானி தற்போது பல தொழில்களை தன்வசம் வைத்திருக்கிறார். குறிப்பாக நடன கலைஞர், தொழிலதிபர், ஐபிஎல் அணியின் உரிமையாளர் என அடுத்தடுத்த பதவியை அவர் அலங்கரித்து வருகிறார். இன்று அவர் இத்தனை கோடிகள் சொத்து வைத்திருந்தாலும் தொடக்கத்தில் தனது வாழ்க்கையை ஆசிரியர் பணியில்தான் ஆரம்பித்துள்ளார். முகேஷ் அம்பானியை திருமனம் செய்த பிறகு கூட அவர் வேலைக்கு சென்றுகொண்டுதான் இருந்துள்ளார். 1985 ஆம் ஆண்டு நீட்டாவுக்கும் முகேஷ் அம்பானிக்கும் திருமணம் நடந்துள்ளது. அது பற்றி 2000ஆம் ஆண்டில் தொலைக்காட்சியில் இருவரும் பேட்டி அளித்துள்ளனர். அந்த பேட்டிகள் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதில் ஆசிரியர் பணியின்போது தனக்கு கிடைத்த வருமானம் ,மாதச்சம்பளம் 800 ரூபாய்தான் என்று கூறியுள்ளார். சம்பளம் எப்படி இருந்தாலும் அவருக்கு அந்த பணி மன நிறைவை தந்ததாகவும் அவரே கூறியுள்ளார். நீட்டா அம்பானியின் அந்த பேட்டியை இதுவரை 33 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இப்போது அவர் ஆசிரியையாக இல்லாவிட்டாலும் கூட அவருக்கு கல்வித்துறை மீது தனி கவனம் இருக்கிறது. இதனால்தான் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியை அவரின் மாமனார் பெயரில் நீட்டா அம்பானி நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *