என்ன நடந்தாலும் இதை நிறுத்த மாட்டோம்!!!!
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களான டாடா,மாருதி சுசுக்கி, மகேந்திரா அண்ட் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள்
மொத்தமாக 20ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கம்பஷன் என்ஜின்களை உற்பத்திசெய்ய இருக்கின்றன. மத்திய அரசாங்கம் என்னதான் மின்சார வாகனங்களை பரிந்துரைத்தாலும் மக்கள் முழுமையாக மின்சார வாகனங்களுக்கு மாற காலம்பிடிக்கும் என்பதால் இந்த முடிவுக்கு இந்த நிறுவனங்கள் வந்துள்ளன. மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் மட்டும் 7ஆயிரம் கோடி ரூபாயை இந்த நுட்பத்துக்காக செலவிடுகிறது இதேபோல் டாடா நிறுவனமும் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயை இதற்காக செலவிடுகின்றன. இதேபோல மாருதி சுசுக்கி நிறுவனமும் உற்பத்தியை தீவிரப்படுத்துகிறது. மக்கள் மத்தியில் தனியாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு இத்தகைய வாகனங்களை இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. 2030-ல்தான் மின்சார வாகனங்கள் முழுமையாக வரும் என்கிற நிலையில் அதுவரை படிம எரிபொருள் கார்களின் ஆதிக்கம் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.