யாருக்கும் எதிரி இல்லை-ரிசர்வ் வங்கி..
இந்தியாவின் நிதித்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு மத்திய வங்கியாக ரிசர்வ் வங்கி திகழ்கிறது. இந்த சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஒரு நிதி நுட்ப நிறுவனத்துக்கும் எதிரி இல்லை என்று அதன் இயக்குநர் சக்தி காந்ததாஸ் விளக்கம் அளித்திருக்கிறார். உண்மையில் நிதி நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சியைத்தான் ரிசர்வ் வங்கி விரும்புவதாகவும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டார். அண்மையில் விதி மீறல் புகாரில் சிக்கிய பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி பிரிவு மீது ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் விளைவாகவே இந்த கேள்வி சக்தி காந்ததாஸிடம் முன்வைக்கப்பட்டது. மார்ச் 15 வரை அவகாசம் அளித்து பேடிஎம் பேமண்ட் வங்கியின் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது என்பது போதுமான அவகசாமாக பார்ப்பதாக சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டார். முன்னதாக இந்த அவகாசம் பிப்ரவரி 29 வரை மட்டுமே இருந்தது.
பேடிஎம் பேமண்ட் வங்கியை நம்பி 15 முதல் 20 விழுக்காடு மக்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர்களும் மற்ற பேமண்ட் வங்கிகளுக்கு மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. நிதி மோசடிகளில் சிக்காமலும், நாட்டின் வளர்ச்சியை குறைக்காமலும் இருக்க ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமண்ட் வங்கியின் மீது கட்டுப்பாடுகள் விதித்தது. தன்னிறைவான வளர்ச்சி இந்த துறையில் இருக்க வேண்டும் என்றும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டார். சீரான வளர்ச்சி இந்த துறையில் இருக்க வேண்டும் என்றும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டுள்ளார்.