எரிபொருள் விலை குறைப்பு ஏதும் இல்லை…
கடந்த டிசம்பர் வரையிலான காலாண்டில் 82 விழுக்காடு அதிக லாபத்தை அரசுத்துறை நிறுவனமான BPCL பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில் எரிபொருள் விலை குறைப்பு என்று தொலைக்காட்சிகள், ஊடகத்தில் வெளியான தகவலில் உண்மை இல்லை என்று அந்நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். செங்கடல் வழியாக கடந்த நவம்பர் 19 முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறியுள்ள கிருஷ்ணகுமார், அந்த தாக்குதல்களால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெயில் பாதிப்பு இல்லை என்றார். செங்கடலுக்கு வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எண்ணெய் கப்பல்கள் வந்தடைய திட்டமிட்டதைவிட 13 முதல் 15 நாட்கள் அதிகரித்ததாக கூறினார். பசுமை ஆற்றல் மற்றும் ஹைட்ரஜன் உற்பத்திகளை அதிகரித்துள்ளதாக கூறியுள்ள அவர், தேர்தலை ஒட்டி பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். உலகளாவிய சூழல் நிலையற்றதாகவே இருப்பதாகவும்,இதுபற்றி கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறிவிட்டார். மொசாம்பிக் நாட்டில் இருந்து இயற்கை எரிவாயு எடுப்பதற்கான பணிகள் நடப்பதாகவும்,அங்கு ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சனை படிப்படியாக சீரடைந்து வருவதாகவும்,அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகள் நடப்பதாகவும் கூறியுள்ளார். ரஷ்யா மட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகம்ஆகிய இடங்களில் இருந்தும் கச்சா எண்ணெய் பெறப்படுவதாகவும், லோயர் ஃசக்காம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஈக்விட்டி வடிவில் எண்ணெயை வாங்கும் திட்டம் இருப்பதாகவும் பிபிசிஎல் தெளிவுபடுத்தியுள்ளது.