எந்த ரிஸ்கும் இல்லையாம்!!!! யார் சொல்றா பாருங்க!!
எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல், எந்த நபரையும் தெரியாமல் செய்யும் முதலீடு நிச்சயம் ஆபத்தில் தான் முடியும்
என்பதை நிரூபிக்கும் வகையில் கிரிப்டோ கரன்சிகள் உள்ளன.இதனால் பணத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை
மிகவும் அதிகமாகும்.இந்த நிலையில் FTX என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனம் திவாலானதாக அறிவித்துள்ளது .
உலகளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மூன்றாவது பெரிய கிரிப்டோ கரன்சி பரிமாற்ற நிறுவனமாக திகழ்ந்த இந்த நிறுவனம் திவாலானதை அடுத்து அதில் பணம் போட்டவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இதற்கென உள்ள இந்திய முகவர்கள் பரிவர்த்தனை அமைப்புகளும் தனியார் வசமே உள்ளன. சூதாட்டம் போல நடக்கும்
இந்த பரிவர்த்தனைகளை அங்கீகரிக்காத மத்திய அரசு கடுமையான வரிகளையும் விதித்துள்ளது. இந்த சூழலில் உலகளவில் கிரிப்டோ கரன்சி மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள் பேசு பொருளாகியுள்ள நிலையில் , இந்தியாவில் இதற்கான வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்று முகவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய கிரிப்டோ கரன்சி நிறுவனமான காயின் ஸ்விட்ச் தனது வாடிக்கையாளர்களுக்கு அண்மையில், தகவல்களை அளித்துள்ளது. அதில் திவாலான FTX-க்கும் தங்கள் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும்,தங்கள் நிறுவனத்தில் போட்ட பணம் பாதுகாப்பாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோலானா என்ற நிறுவனம் FTX உடன் தொடர்பில் இருந்ததால் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளது. வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க பலவிதமான புதிய உத்திகளையும் கிரிப்டோ நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளனர். மேலும் கிரிப்டோவில் இருந்து பணத்தை திரும்ப எடுக்கவும் சில நிறுவனங்கள் நிபந்தனைகளை விதித்துள்ளன.