டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல: நிதியமைச்சர் சீதாராமன் !!!
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த கட்டணம் விதிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்று மத்திய அரசு நம்புவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர், இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும்வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக ஒரு ட்வீட்டில், UPI சேவைகளுக்கு எந்தவிதமான கட்டணங்களையும் விதிக்க அரசாங்கத்தில் எந்தப் பரிசீலனையும் இல்லை. செலவுகளை சேவை வழங்குநர்கள் மற்ற வழிகளில் சரி செய்ய வேண்டும்” என்று சீதாராமன் கூறியிருந்தார்.
இருப்பினும் கடந்த வாரம் மத்திய அரசு UPI பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் விதிக்கப்படாது என்று அறிவித்திருந்தது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி ஜூலை மாதத்தில் UPI பரிவர்த்தனைகள் 6 பில்லியனைத் தாண்டியதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.