சிறிய பாக்கெட்டுகளால் பெரிய தலைவலி..
மக்கள் மத்தியில் எளிதாக விற்கப்பட்ட உணவுப்பொருட்கள் தற்போது பெரிய சிக்கலாக மாறி வருகிறது. இதனால் சிறிய பேக்கட்டுகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலையை மாற்ற எப்எம்சிஜி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. 5 மற்றும் 10 ரூபாய் பாக்கெட்டுகளை மாற்றவும் அந்நிறுவனங்கள் பணிகளை தொடங்கியுள்ளன. அதிகரிக்கும் உள்ளீட்டு கட்டணங்கள், உணவுப்பொருட்கள் விலையேற்றம் உள்ளிட்ட காரணிகளால் இந்த முடிவை நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன. விலையை உயர்த்த முடியாதபட்சத்தில் அதே விலைக்கு அளவை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 10 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டுகள் இனி 20 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளது. 5 மற்றும் 10 ரூபாய் விலையிலும் விற்பனை தொடரும் என்றும், அதே நேரம் பிஸ்கட்களின் அளவை குறைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். FMCFG நிறுவனங்களின் மொத்த விற்பனையில் 5 ரூபாய் பாக்கெட்டுகள்தான் 32 விழுக்காடுபங்களிப்பை தருகின்றன. 10 ரூபாய் பாக்கெட் 23 விழுக்காடு, 20 ரூபாய் பாக்கெட்டுகள் 12 முதல் 14%வரை பங்களிப்பை தருகின்றன. லாபத்தை அதிகரிக்க அளவை குறைப்பதுதான் ஒரே வழியாக இருக்கும் என்று பல நிறுவனங்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.