பரஸ்பர நிதியில் முதல் முறையாக..
வரலாற்றிலேயே முதல் முறையாக மாதாந்திர பரஸ்பர நிதியின் சிப் எனப்படும் மாதத்தவணை, கடந்த அக்டோபரில் 25 ஆயிரம் ரூபாய் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பரில் இந்த தொகை 24 ஆயிரத்து 509 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த அக்டோபரில் 25 ஆயிரத்து 323 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்தாண்டு அக்டோபரில் இந்த தொகை 16 ஆயிரத்து 928 கோடி ரூபாயாக இருந்தது. மாதாந்திர தவணை முறையில் பரஸ்பர நிதியில் பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை 21 கோடியே 65 லட்சம் பேராக உயர்ந்துள்ளனர். மாதாந்திர ஈக்விட்டி, ஹைபிரிட், தீர்வுகள் சார்ந்த திட்டங்கள் அக்டோபரில் அதிகரித்துள்ளது. சில்லறை சொத்துகள் சார்ந்த மதிப்பு ஈக்விட்டி, ஹைப்ரிட் மற்றும் தீர்வு சார்ந்த திட்டங்களின் மதிப்பு 39லட்சத்து 18 ஆயிரத்து 611 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த செப்டம்பரில் 40லட்சத்து 44 ஆயிரத்து 98 கோடி ரூபாயாக இருந்தது. ஈக்விட்டி திட்டங்கள் மூலமாக 41,886 கோடி ரூபாய் அளவுக்கு நிதி கிடைத்துள்ளது. புதிய எஸ்ஐபி திட்டங்கள் கடந்த அக்டோபரில் 63லட்சத்து 69 ஆயிரத்து919 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மாதாந்திர சொத்து நிர்வகிக்கும் மதிப்பு மட்டும் 13.30லட்சம் கோடியாக இருக்கிறது. இது கடந்த செப்டம்பரில் 9.87லட்சமாக இருந்த சிப் கணக்குகளின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து 10.12 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 2021 முதல் இந்திய பங்குச்சந்தைகளில் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாதந்தோறும் பணத்தை சிப் செய்யும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 10.12கோடியாக இருக்கிறது. இதன் பங்களிப்பு மட்டுமே 25ஆயிரத்து 322 கோடி ரூபாயாக உள்ளது. ஒழுக்கமான முறையில் பணத்தை நிர்வகிப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது.