பாரத் பேட்டரி செல்லை அறிமுகப்படுத்தியது ஓலா எலெக்ட்ரிக்…
இந்தியாவின் முன்னணி மின்சார பைக் நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பாரத் பேட்டரி செல் என்ற பேட்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட 4680 வகை செல்லாக இது பெருமை அளிக்கிறது. இதற்கு 70 காப்புரிமைகளை ஓலா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த வகை பேட்டரி செல்கள் தற்போது பயன்படுத்தப்படும் 2170 செல்களை விட 5 மடங்கு அதிக ஆற்றல் அடர்த்தி கொண்டது என அந்நிறுவனம் கூறியுள்ளது. பேட்டரி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் மின்சார வாகன தொழிற்சாலைகள் தற்சார்புக்கு இந்த புதிய செல்கள் வழிகாட்டியாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. புதிய வகை மின்சார மோட்டர் சைக்கிள்களையும் ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய மின்சார மோட்டர் சைக்கிள் விற்பனையில் 3-ல் இரண்டு பங்கு இந்தியாவில் தங்கள் நிறுவனம் உள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது. மின்சார வாகன சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் மிகமுக்கிய இடத்தை அந்நிறுவனம் பிடிக்கும் என்றும் பவிஷ் அகர்வால் கூறியுள்ளார். ஏற்கனவே ஓலா நிறுவனத்தில் எஸ்1, எஸ்1 புரோ ரக மின்சார ஸ்கூட்டர்கள் உள்ள நிலையில் ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய பொருட்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது.